தானே ஒரு அரைகுறை.. தன்னைப் போலவே இன்னொரு அரைகுறையும் இருந்தால் எப்படி இருக்கும்... இது புத்தி சம்பந்தப்பட்டதல்ல.. டிரஸ் தொடர்பானது.. நிராயுதம் என்ற படத்திற்காக இப்படி ஒரு ஜிலீர் காட்சியை வைத்துள்ளனராம்.
அரைகுறை ஆடையுடன் தனித்து விடப்படும் ஹீரோயின், தன்னைப் போலவே அரைகுறை ஆடையுடன் சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோவை சந்திக்கிறார். இருவரும் அந்த இடத்திலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் காட்சியாம். நிராயுதம் படத்திற்காக இந்தக் காட்சியைப் படம் பிடித்துள்ளனற். இக்காட்சியில் சந்தோஷ் மற்றும் சாரிகா ஆகியோர் நடித்தனர்.
இந்த சாரிகா, கதம் கதம் படத்தில் நாயகியாக நடித்தவர். இக்காட்சியின்போது மேலுடை எதுவும் இல்லாமல் வெறும் நியூஸ் பேப்பரை மட்டும் சுற்றிக் கொண்டு சாகரிகா நடித்தாராம்.
எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படத்திற்கு நிராயுதம் என்று பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு, ரங்கா மிட்டாய் உட்பட பல படங்களில் நடித்தவர்.
கதாநாயகியாக சாரிகா நடிக்கிறார். இவர் கதம் கதம் படத்தில் நாயகியாக நடித்தவர் ஆவார். முக்கிய வேடத்தில் வெங்கட் என்ற புதுமுகம் நடிக்கிறார்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் எம்.பி. ராஜதுரை. படம் பற்றி இயக்குனர் ராஜதுரையிடம் கேட்டபோது அவர் சில காட்சிகளை விவரித்தார்....
கதாநாயகனாக நடிக்கும் சந்தோஷ் அமெரிக்காவிலிருந்து வரும் பந்தா பேர்வழி. சாப்ட்வேரில் பணிபுரிபவர் சாரிகா. அறிமுக நடிகரான வெங்கட் கால் டாக்சி டிரைவர்.
சாரிகா வேலை முடிந்து நடு இரவில் வெங்கட்டின் கால் டாக்சியில் பயணிக்கிறார். அவருக்கு மயக்க மருந்து ஸ்பிரே செய்து அவளை கடத்துகிறார் கால் டாக்சி டிரைவர் வெங்கட்.
கண்விழித்து பார்க்கும்போது அரை குறை ஆடையுடன் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை உணர்கிறாள் நாயகி. அரை குறை ஆடையுடன், தனது ஆடைகளையும், தப்பிக்க வழியையும் தேடி ஒவ்வொரு அறையாக கடந்து வருகிறார்.
இந்தக் காட்சியின்போது மேலாடை எதுவும் இல்லாமல் வெறும் செய்தித் தாளை மேலே மார்புக்குக் குறுக்கே சுற்றியபடி நடித்தாராம் நாயகி சாரிகா. அதேசமயம், ஆபாசம் இல்லாமலும் காட்சி இருக்குமாம்.
அப்போது ஒரு அறையில் ஹீரோ சந்தோஷும் அரை குறை ஆடையுடன் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள் நாயகி. இருவரும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாம்.
ஊட்டியில், பங்களா போன்று அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது என்று இயக்குநர் கூறினார். ரொம்ப வித்தியாசமான கதையா இருக்கே!
0 comments:
Post a Comment