↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

காக்கி சட்டை வெற்றி படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வந்த 'ரஜினி முருகன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து ஜூலை 17ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் கோலிவுட்டில் கசிந்து வருகின்றன.

இதுவரை எந்த படத்திலும் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை எனினும், பிரபல இயக்குனர்கள் சிலர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மே மாதம் முதல் வாரத்தில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயனின் 'காக்கி சட்டை' சூப்பர் ஹிட் ஆனதால் அவரது அடுத்த படமான 'ரஜினி முருகன்' படத்தின் வியாபாரமும் மிகப்பெரிய அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்து வரும் 'வஜ்ரகயா' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top