↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஸ்ருதிஹாசன் இனிமேல் நடிக்க முடியுமா? - Cineulagam
உலக நாயகனின் மகள் என்ற பெரிய அந்தஸ்த்து இருந்தும் அதை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் முன்னேறியவர் ஸ்ருதி. இவர் சில மாதங்களுக்கு முன் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதாக இருந்தது.
ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை திடிரென்று அப்படத்திலிருந்து விலகினார். இதனால், படத்தின் தயாரிப்பு நிறுவனம் இவர் மீது வழக்கு தொடர்ந்து, இனி ஸ்ருதி நடிக்க கூடாது என்ற அளவிற்கு கூறப்பட்டது.
தற்போது ஸ்ருதி தரப்பிலிருந்து, ’இந்த படத்திற்காக நான் எந்த முன் பணமும் வாங்க வில்லை, என் மீது வழக்கு தொடர்வதற்கு முன்பே, தமன்னாவை புக் செய்து விட்டார்கள்’ என்று அந்நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளார்.
மேலும், தன் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இதையடுத்து ஸ்ருதி மீதான தடை நீங்குமா? என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top