↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புலி என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்- நெகிழ்ந்த பிரபலம் - Cineulagam
இளைய தளபதி விஜய் நடிப்பில் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் புலி. இப்படத்தை சிம்புதேவன் இயக்க, விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு சச்சின், வில்லு படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த வித்யூ சமீபத்தில் ”'புலி' படத்தில் என்னுடைய கேரக்டரின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துவிட்டது. இந்த படத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாததாக அமைந்துள்ளது.
'புலி' படக்குழுவினர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். விஜய் என்னை பிரமாதமாக ஊக்குவித்தார்” என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top