↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அடுத்த உலகக் கோப்பை போட்டியில் விராட் கோஹ்லி ஆட்டநாயகன் விருது வெல்லும் போது அதனை அனுஷ்கா சர்மா வாங்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் விராட் கோஹ்லி ஒரு ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதற்குக் காரணம் அவரது காதலியான அனுஷ்கா சர்மாதான் என்று ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் கடுமையாக விமர்சனம் எழுந்தது. இதற்கு பாலிவுட் நடிகர்களும், நடிகைகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுஷ்கா சர்மாவிற்கு ஆதரவாகவே கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது ஐ.பி.எஸ் ஆட்டத்தில் பெங்களூரு அணியில் விராட் கோஹ்லி விளையாடி வருகிறார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அனுஷ்கா சர்மாவும் உடன் சென்று வருகிறார். இதற்கும் விமர்சனங்கள் எழாமல் இல்லை.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான பிரீத்தி ஜிந்தா கூறுகையில், ''இது முதுகெலும்பற்றவர்களின் சிணுங்கல் போன்றது. இவர்களது செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.
அடுத்த முறை உலகக் கோப்பை போட்டியில் விராட் கோஹ்லி ஆட்ட நாயகள் விருது பெறும் போது, அந்த விருதை அனுஷ்கா சென்று வாங்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்துக்கும் நடிகர்- நடிகைகள் விமர்சிக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது'' என்றும் கூறியுள்ளார்.
அதோடு நடப்பு ஐ.பி.எல். தொடரில், பஞ்சாப் அணி சாம்பியன் ஆகும் என்றும் பிரீத்தி ஜிந்தா நம்பிக்கை தெரிவித்தார்.
Home
»
anushkasharma
»
ipl
»
kholi
»
prity
»
sports
»
sports.tamil
» கோஹ்லி மேன் ஆப் தி மேச் பெறனும், அதை அனுஷ்கா வாங்கனும்.. ஜிந்தாவின் ஆசை!
Recent Posts
சென்னை அணியை கதறடித்த விராட் கோஹ்லி
ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்கு எதிராக மட்டும் 600 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்[...]
முதல் இடம்பிடித்த சென்னை: 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி (வீடியோ இணைப்பு)
பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில[...]
பஞ்சாப்புக்கு எதிராக சென்னை பட்டாசு வெடி பேட்டிங்..18 ஓவர்களில் 171/3 ரன்கள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல[...]
நில நடுக்கத்தை உணர்ந்து இதய துடிப்பு அதிகரித்தது..ஐபிஎல் வீரர்களின் பீதி அனுபவம்!
நில நடுக்கத்தை உணர்ந்ததாக பீதியுடன் தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளனர் ஐபிஎல் வீரர்கள். இதுகுறித்து ர[...]
சச்சின் காலில் விழுந்த யுவராஜ்..
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கரின் காலை தொட்டு வணங்கி அவருக்கு மரியாதை செலு[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.