↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
மேக்ஸ் மொபிலிங்க் நிறுவனத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர் டோணி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் டோணி மேக்ஸ் மொபிலிங்க் நிறுவனத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கும், மேக்ஸ் மொபிலிங்க் நிறுவனத்திற்கும் இடையேயான விளம்பர ஒப்பந்தம் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிந்துவிட்டது. அந்நிறுவன தயாரிப்புகளை என் பெயரை வைத்து விளம்பரப்படுத்தியதில் எனக்கு ரூ.10 கோடி பாக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஒப்பந்தம் முடிந்த பிறகும் எனது பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்கிறார்கள். அந்த நிறுவனத்தை என் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை திங்கட்கிழமை விசாரித்த நீதிமன்றம் மேக்ஸ் மொபிலிங்க் நிறுவனம் டோணியின் பெயரை விளம்பரத்தில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மேக்ஸ் மொபிலிங்க் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment