லிபியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்டனர். சுமார் 29 நிமிடங்கள் பதிவாகியுள்ள இந்த வீடியோவில் பிணையக்கைதிகளின் கண்களை கட்டி கடற்கரை ஓரமாக தீவிரவாதிகள் இழுத்து வருகின்றனர்.
பின்னர், கிறிஸ்த்துவர்களில் 15 நபர்களை மண்டியிட வைத்து துடிக்க துடிக்க தலையை துண்டித்து கொல்கின்றனர். எஞ்சி உள்ள 15 கிறிஸ்த்துவர்களின் பின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது போல் அந்த வீடியோவில் காட்சிகள் பதிவாகியுள்ளன.
கொடூரத்தை அரங்கேற்றியதற்கு பிறகு தீவிரவாதிகளில் ஒருவன், ஒரு கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு மற்றொரு கையில் ஒரு அறிக்கையை உரத்த குரலில் வாசிக்கிறான்.
அப்போது, கிறிஸ்த்துவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் அல்லது குரானில் கூறப்பட்டுள்ளது போல் இஸ்லாமியர்களுக்கு சிறப்பு வரியை செலுத்த வேண்டும் என தெரிவிக்கிறான்.
பின்னர், கமெராவிற்கு முன்னால் கையை நீட்டி பேசிய தீவிரவாதி, ‘உங்களுக்கு கீழ் சிந்தப்படும் இஸ்லாமியர்களின் ரத்தம் மலிவானது அல்ல. சிலுவையை தாங்கியுள்ள நாடுகளே, இதோ நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம்’ என மிரட்டல் விடுக்கிறான்.
இதன் பிறகு, கடந்த பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட மற்றொரு கிறிஸ்த்துவர்களின் கொலை வீடியோவையும் தற்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் ஒன்றாக காட்டுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன.
இந்த இரண்டு வீடியோக்களிலும் ஐ.எஸ் தீவிரவாத பிரிவான al-Furqan என்ற முத்திரை பதிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஐ.எஸ் தீவிரவாதிகள் 30 கிறிஸ்த்துவர்களை கொன்றது போல் வெளியிட்டுள்ள இரண்டாவது வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment