மத்திய இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மிட்லன்ட்ஸ் நகரின் அருகாமையில் வசித்துவந்த கிளைனிஸ் பென்ஸ்லி (47) என்ற பெண் ஸ்மெத்விக் பகுதியில் இருக்கும் ஒரு பப்பில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அந்தப் பெண்மணியை 20 வயது வாலிபனான ஜோஹெப் மஜித் என்பவனும் 13 வயது சிறுவனான பெட்ரி குர்தியும் வழிமறித்து அவரது பணப்பையை பறிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக முரட்டுத்தனமாக அவரை தாக்கியதால் அவர் கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்த அவரது முகத்தின் மீது தனது ஷு காலால் பெட்ரி குர்தி மிதித்ததில் படுகாயமடைந்த கிளைனிஸ் பென்ஸ்லி மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரது கைப்பையில் இருந்த பணம், நகைகள் என அனைத்தையும் திருடிக் கொண்டு இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
பின்னர் சாலையில் சென்றவர்கள் சிலர் அந்த பெண்மணியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால், அந்த பெண்மணிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இந்த செய்தி வெளியானதும் பள்ளி மாணவனான பெட்ரி குர்தி பொலிசில் சரணடைந்ததோடு அவன் அளித்த தகவலால் அவனது கூட்டாளி ஜோஹெப் மஜித் கைது செய்யப்பட்டான்.
இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் லண்டனில் உள்ள கிரவுன் நீதிமன்றத்தில் கொலை வழக்கு நடைபெற்று வந்துள்ளது.
இவ்வழக்கில், எதிர்த்து தாக்க முடியாத ஒரு பெண்ணை முரட்டுத்தனமாக கொன்ற சிறுவன் பெட்ரிக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என பிரித்தானிய ராணி கருத்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே நீதிபதி பெட்ரி குர்திக்கு வாலிப வயதை அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச ஆயுள் தண்டனையான 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
அவனது கூட்டாளியான ஜோஹெப் மஜித்த்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் விசாரணை காலமான 8 மாதங்களை பெட்ரி சிறையில் கழித்ததால் இன்னும் 11 ஆண்டுகள் 4 மாதங்களுக்கு சிறை தண்டனையை அவன் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment