↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தெலுங்கின் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள கோபாலா கோபாலா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு ரசிகர் மன்றம் வாயிலாக பாஸ் விநியோகிக்கப்பட்டிருந்தது.
கோபாலா கோபாலா இந்தி ஓ மை காட் படத்தின் தெலுங்கு ரீமேக். இந்தியில் பரேஷ் ராவெல் நடித்த நாயகன் வேடத்தில் வெங்கடேஷும், கடவுள் கிருஷ்ணராக அக்ஷய் குமார் நடித்த கௌரவ வேடத்தில் பவன் கல்யாணும் நடித்துள்ளனர்.
 
ஆடியோ விழா நடந்த ஆடிட்டோரியத்தில் நுழைவதில் ரசிகர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போதிய பாஸ் விநியோகிக்கப்படாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. 
 
இந்த அடிதடியின் போது, விழா தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு குண்டூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்ற ரசிகரின் கழுத்துப் பகுதியில் யாரோ கத்தியால் குத்தினர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top