தன் யதார்த்த நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தவர் தனுஷ். இவர் தன் ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களையும் கவர ஆரம்பித்து விட்டார்.
இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் மற்றொரு ஹிந்தி படம் ஷமிதாப். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது. இது குறித்து பேசிய தனுஷ் ‘பாலிவுட்டில் நான் எல்லா முயற்சிகளும் எடுக்க ரெடியாகவுள்ளேன்.
ஏனெனில் இங்கு இழப்பதற்கு ஏதும் இல்லை, ஆனால், தமிழ் சினிமாவில் அப்படி இல்லை, ஒரு சின்ன வட்டத்திற்குள் அடைந்து விட்டேன், இதனால் புதுபுது முயற்சிகளை எடுக்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment