↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஏய் இது அதுல்ல... என்று இன்றைக்கு சின்ன வாண்டுகள் கூட சினிமாவின் சீன் காப்பியை சொல்லும் காலம் வந்து விட்டது. காரணம் சேட்டிலைட் சேனல்களின் புண்ணியம்தான்.

 வீட்டு முற்றத்திற்குள் ஹாலிவுட் படங்கள் வந்து குவிவதால் தமிழ் படங்களின் சீன்களைப் பார்த்து இணையத்தில் பிரித்து மேய்ந்து விடுகின்றனர். இப்படித்தான் ‘யான்' படத்தில் சீன்கள் எதிலிருந்து உருவப்பட்டது என்று போட்டு தாக்கினார்கள்.

ரஜினியின் ‘லிங்கா' படத்திற்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது. லிங்கா படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு நகைக் கண்காட்சியில் பேரன் ரஜினி மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நெக்லஸைத் திருடிச் செல்வார். அப்போது ஒரு குறுகலான ஒரு சின்ன அறைக்குள் ரஜினியும், அனுஷ்காவும் மாட்டிக் கொள்வார்கள். அந்த அறையிலிருந்து கொண்டு, ஒரு சிறிய காந்தத் துண்டின் உதவியுடன் அறைக்கு வெளியே மாட்டி வைக்கப்பட்டுள்ள சாவியை, ரஜினி தன் கைக்குக் கொண்டுவரும் காட்சி ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாகப் போட்டு உடைத்திருக்கிறார்கள்.

 1966ஆம் ஆண்டு வெளியான ‘ஹௌ டு ஸ்டீல் எ மில்லியன்' என்ற படத்தில் மேலே குறிப்பிட்டுள்ள காட்சி அப்படியே இருக்கிறது. இதுதான் இன்றைக்கு இணையத்தில் உலாவருகிறது. 

வில்லியம் வைலர் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியும் அனுஷ்காவும் சிக்கிக்கொண்டதுபோல் பீட்டர் ஓ டூல், ஆட்ரி ஹீப்பர்ன் ஆகிய நடிகர்கள் சிக்கிக்கொண்டு சாவி எடுப்பார்கள்.

பலூன் காட்சியும்தான் 

படத்தின் கிளைமாக்ஸ் பலூன் காட்சிக்காக அவர்கள் எந்த ஹாலிவுட் படத்தையும் பார்க்கவில்லை. ஸ்ரீதர் இயக்கத்தில் 1969-ம் ஆண்டு வெளிவந்த ‘சிவந்த மண்' இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகி காஞ்சனாவை, பலூனில் கடத்திச் செல்வார் வில்லன் எம்.என். நம்பியார் அப்போது, நாயகன் சிவாஜி பலூனுக்குள் தாவி ஏறி நாயகியைக் காப்பாற்றுவார். அந்தக் காட்சிதான் அப்படியே லிங்காவில் உல்டாவாகியிருக்கிறது என்கிறார்கள் இணையவாசிகள். 

வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

 இன்றைக்கு சினிமாவில் கதைத் திருட்டுப் புகார்கள் அதிகரித்து வருகிறது. ஒரு படம் ஹிட் அல்லது ஃப்ளாப் என்பதை இன்றைக்கு ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களே நிர்ணயிக்கின்றன. படம் மொக்கை என்று ஸ்டேட்டஸ் போட்டால் கூட பரவாயில்லை அதற்கு பதிலாக அது எந்த ஆங்கில, அல்லது உலக சினிமாவின் காப்பி, காட்சிகளை எந்தெந்தப் படங்களிலிருந்து உருவியிருக்கிறார்கள் என்பதை யூடியூப்பில் ஆதாரத்தோடு பதிவிடுகின்றனர். இதில்தான் குட்டு வெளிப்படுகிறது.

ஆமா... நிசந்தான்... 

இப்படி லிங்கா காப்பி பற்றி வீடியோ பரவி வருவது பற்றி ‘தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டனர். அதுக்கு பதில் சொன்ன ரவிக்குமார், படத்தில் ஒவ்வொரு சீனும் ஒவ்வொரு அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் சொன்னாங்க. அதில ஒருத்தர் சொன்ன சீன்தான் அது. எங்களுக்கும் அதை எங்கேயோ பார்த்த மாதிரிதான் இருந்துச்சு. அந்த சீனை ஷூட் பண்றதுக்காக, அந்த இங்கிலீஷ் படத்தைத் தேடினோம். ஆனா கிடைக்கலை. அப்புறம் நாங்களாகவே ஷூட் பண்ணிட்டோம்" என்றார். ஆக சீன் சுட்டதை ஒத்துக்கொண்டார். 

ரசிகர்கள் வளர்ந்து விட்டார்கள் 

இதுபோல படங்களில் காப்பியடித்து சீன் வைப்பது சரியா என்று கமலிடம் சில மாதங்களுக்கு முன்பு கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியது எல்லா ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கும். ஒரு படத்தின் காட்சியைப் பார்த்து அதில் ஏற்பட்ட இன்ஸ்பிரேசனில் அதே போல காட்சி அமைப்பது ஒன்றும் புதிய விசயமில்லை. நானும் ரசிகனாக இருந்து கலைஞனாக வந்தவன்தான். ஒரு படம் பார்த்தால் ரசிக்கவேண்டுமே தவிர இது எதிலிருந்து எடுக்கப்பட்டது என்று ஆராய்ந்தால் படத்தை ரசிக்கமுடியாது என்றார் கமல்.

நானும் சொல்லியிருக்கேன்


 பட்டினத்தார் பாடல்களை கண்ணதாசன் காப்பியடிக்கிறார் என்று நானும் சொல்லியிருக்கிறேன். ஆனால் இன்றைய ரசிகர்கள் சீன் பை சீன் ரசிப்பதோடு எதிலிருந்து எதை எடுத்தார்கள் என்று கண்டுபிடித்து விடுகிறார்கள். உலக சினிமாவை பார்க்கும் ரசிகர்கள் வளர்ந்து விட்டார்கள் என்றார். கடைசிவரை காப்பியடிப்பது தவறு என்று கமல் சொல்லவேயில்லை என்பதுதான் சோகம்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top