↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
iவிக்ரம்-ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ஐ. இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் அதிக பொருட் செலவில் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் டீஸர், டிரைலர் வெளியாகி சாதனைகள் படைத்தது. படம் பொங்கலுக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஐ படத்திற்கு இம்மாதம் 30ம் தேதி வரை தடை விதிப்பட்டுள்ளதாக இணைய தளங்களில் செய்திகள் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இதுகுறித்து ஐ படத் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்கும் போது, ஐ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. ஐ படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறியவர்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். ஆகையால் படம் திட்டமிட்டப்படி ஜனவரி 14-ம் தேதி எந்தவித சிக்கலும் இல்லாமல் வெளியாகும் என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top