↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த நடன நிகழ்ச்சியின்போது, இளம்ஜோடிகள் கட்டிப் பிடித்து முத்தமிட்டு கொண்டனர். இதுபற்றி தகவல் பரவியதும் சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நமது கலாச்சாரத்திற்கு எதிராக பொது இடத்தில் இளம்ஜோடிகள் முத்தமிட்டு கொண்டதை கண்டித்து, அந்த நட்சத்திர ஓட்டல் சூறையாடப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.
நட்சத்திர ஓட்டல் தாக்குதலை கண்டித்தும் இளம்ஜோடிகளுக்கு ஆதரவாகவும் ‘கிஸ் ஆப் லவ்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டு பொது இடத்தில் முத்தம் கொடுக்கும் போராட்டங்களும் நடத்தப்பட்டது.
இந்த முத்தப்போராட்டம் சென்னை உள்பட நாடு முழுவதும் பரவியது. மேலும், கேரள மாநிலத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பொதுஇடங்களில் இளம் ஜோடிகள் திரண்டு முத்தம் கொடுக்கும் போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.
முத்தப்போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிவசேனா, பஜ்ரங்தளம் போன்ற இந்து அமைப்புகளும், எதிர் போராட்டம் நடத்துவதால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.
முத்தப்போராட்டம் பற்றி போலீசார் கூறும்போது, முத்தப்போராட்டத்தை நாங்கள் தடுக்க மாட்டோம் என்றும் அதே சமயம் பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தனர்.
இந்த நிலையில் ஆலப்புழா கடற்கரையில் 'கிஸ் ஆப் லவ்' அமைப்பினர் முத்தப்போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதுபற்றி ஆலப்புழா போலீசுக்கு தகவல் தெரிவித்த அவர்கள், தங்கள் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அதே சமயம் இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்று சிவசேனா எச்சரித்து இருந்தது.
இதனால், பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் முத்தப்போராட்டத்தை நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், நேற்று ஆலப்புழா கடற்கரை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.
முத்தப்போராட்டம் பற்றிய தகவல் வெளியில் பரவி இருந்ததால் ஆலப்புழா கடற்கரையில் பொதுமக்களும் முத்தப் போராட்ட எதிர்ப்பாளர்களும் திரண்டு இருந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அந்த நேரத்தில் 6 ஜோடிகள் கடற்கரை நோக்கி நடந்து வந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முத்தப் போராட்டக்காரர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்களை அங்கு இருந்து செல்லும்படி போலீசார் கூறினார்கள். அதற்குள் சுமார் 35–க்கும் மேற்பட்ட முத்தப்போராட்டக்காரர்கள் அங்கு திரண்டனர். இந்த போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அங்கு சென்று கோஷம் எழுப்பினார்கள்.
இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் முத்தப் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை வேனில் ஏற்றி ஆலப்புழா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
போலீசார் முன்னிலையிலும் போலீஸ் வேனிலும் முத்தப்போராட்டக்காரர்கள் முத்தமிட்டு கொண்டனர். மேலும், போலீஸ் நிலையத்திலும் அந்த ஜோடிகள் தங்கள் முத்தப்போராட்டத்தை தொடர்ந்தனர். பரபரப்பு அடங்கிய பிறகு முத்தப் போராட்டக்காரர்களை போலீசார் அங்கு இருந்து அனுப்பி வைத்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top