இதுபற்றி தனுஷ் கூறும்போது"மற்ற யாரையும் போல் அமைராவும் எனக்கு ஒரு சக நடிகை அவ்வளவுதான். நான் திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இதைவிட எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. இந்தி படங்களை பொறுத்தவரையில் ஒரு சில பெரிய நிறுவனங்கள் ஹீரோவிடம் எதிர்பார்க்கும் அம்சங்களுக்கு ஏற்ற ஹீரோ நான் கிடையாது. பாலிவுட்டில் நான் இழப்பதற்கு எதுவும் கிடையாது.
அதனால்தான் சோதனை முயற்சியில் என் படங்களை தேர்ந்தெடுக்கிறேன். எனது முதல் படம் ‘ராஞ்சனா'க்கு பிறகு அதேபாணியில் நிறைய கதைகள் வந்தன. ஏற்கவில்லை. பால்கி இயக்கத்தில் அமிதாப், பி.சி.ஸ்ரீராம், இளையராஜா கூட்டணியில் நடிக்கும் ‘ஷமிதாப்' எனக்கு 2வது படமாக அமைந்தது பெருமை. இந்த கூட்டணியில் சேர்ந்து நின்றாலே எனக்கு கால்கள் தடுமாறும். அவர்களுடன் நடிப்பதென்பது பெரிய விஷயம்" என்றார்.
![What is the relationship with amaira? Dhanush reply அமைராவுடன் என்ன உறவு? தனுஷ் பதில்](http://cinema.dinakaran.com/Karan_img/gallery/Kollywood-news-10751.jpg)
0 comments:
Post a Comment