↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அமெரிக்காவில் முதல் முறையாக 328 அரங்குகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது ரஜினியின் லிங்கா. நாடு முழுவதும் உள்ள 40 மாநிலங்களில் 154 நகரங்களில் 328 தியேட்டர்களில் லிங்காவின் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகள் வெளியாகின்றன. இந்திப் பதிப்பு வெளியாகும் அரங்குகள் எண்ணிக்கை மட்டும் இன்னும் வெளியாகவில்லை.
அமெரிக்காவில் இவ்வளவு அரங்குகளில் வெளியாகும் ஹாலிவுட் அல்லாத ஒரே படம் லிங்காதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, அமெரிக்காவிலேயே முதல் முறையாக ஹாலிவுட்டைச் சேராத ஒரு படம் எக்ஸ்எல் ஐமேக்ஸ் அரங்கில் வெளியாகிறது.
அமெரிக்காவின் மேற்கு மத்தியப் பகுதியில் உள்ள மிகப் பெரிய அரங்கமான மூவிகோ ரோஸ்மாண்ட்டில் அனைத்து காட்சிகளும் லிங்கா திரையிடப்படுகிறது. அமெரிக்காவில் லிங்கா படத்துக்கான டிக்கெட் விற்பனையும் நேற்றே தொடங்கிவிட்டது. சிகாகோவில் லிங்கா படத்தின் முதல் காட்சிக்கான முதல் டிக்கெட்டை தக்ஷின் ஜெய் பாபாவுக்கு விற்கப்பட்டது. 500 இருக்கைகள் கொண்ட ஐமேக்ஸ் அரங்கில் அனைத்து டிக்கெட்டுகளையும் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கிவிட்டனர்.
Home
»
»Unlabelled
» அமெரிக்காவில் முதல் முறையாக 40 மாகாணங்களில் 328 அரங்குகளில் லிங்கா!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment