
சஜின் வாஸ் குணவர்த்தன என்றால் அனைவருக்கும் தெரியும் , அவர் மகிந்தருக்கு மிக நெருக்கமானவர் என்று. மகிந்தர் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் எல்லா வெளிநாட்டுப் பயணங்களிலும் இவர் மகிந்தரோடு செல்வது வழக்கம். இறுதியாக அமெரிக்கா சென்றவேளை , மதுபோதை தலைக்கேற பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவரான கிறிஸ் நோனிசின் கன்னத்தை இவர் பதம் பார்த்தார். அதனை கூட மகிந்த அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அந்த அளவு அவருக்கு மகிந்த அரசில் செல்வாக்கு இருந்தது. அதுபோக சஜின் வாஸ் குணவர்த்தன தான் நமால் ராஜபக்ஷவின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
இவர்கள் செய்யும் பெண்கள் சேஷ்ட்டை உட்பட , அனைத்து வகையான மொல்லமாரித்தனத்திற்கும் சஜின் வாஸ் தான் துணை நிற்பார். நேற்றைய தினம் அவரை சி.ஐ.டி பொலிசார் நீதிமன்றம் அழைத்துச் சென்று , நீதிபதியில் உத்தரவின் பெயரில் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள். வரும் 20ம் திகதிவரை சயின் வாஸை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகிந்தர் ஆட்சிக் காலத்தில் பல வாகனங்களை இவர் தனது வசமாக்கிக்கொண்டுள்ளார் என்பதே குற்றச்சாட்டாகும்.
குறித்த பல வாகனங்களின் பெறுமதி பல கோடிகளை தாண்டும். மகிந்தரின் சகோதரர் முதலில் கைதானார். தற்போது சஜின் வாஸ் , என்று பல அல்லகைகள் கைதாகிக்கொண்டு இருக்கிறார்கள். மகிந்தர் நிலை குலைந்த நிலையில் காணப்படுகிறார். பகட்டாக வெளிவேஷம் போட்டு அலைந்து திரிகிறார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. தமிழர்கள் அப்படியே நாற்காலியில் அமர்ந்து காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு இருந்து இதனை ரசிக்க வேண்டியது தான். இது தமிழர்களின் காலம்... என்று கூடச் சொல்லலாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.