↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad  புதிதாக செட் சேர்ந்த சமந்தா-எமி
சமந்தாவை பொறுத்தவரை கொஞ்சம் போல்டாக கருத்துக்களை சொல்பவர். இதனால் அவரிடம் நெருக்கமாக பழகுபவர்கள் குறைவுதான். டோலிவுட்டை பொறுத்தவரை பிரணிதா செட் சேர்ந்திருந்தார். கோலிவுட்டில் இதுவரை செட் சேராமல் தள்ளியே நின்றுக் கொண்டிருந்த சமந்தாவுக்கு புதிதாக எமி ஜாக்ஸன் கிடைத்திருக்கிறார். வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இதில் மற்றொரு ஹீரோயினாக எமி ஜாக்ஸனும் நடிக்கிறார். தனுஷ், சமந்தா கெமிஸ்ட்ரியை விட சமந்தா, எமிக்கு இடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனதால் இருவரும் தோழிகளாகிவிட்டனர்.

அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்துக்கான ஹீரோயின் செலக்‌ஷனுக்கு தலையை பீய்த்துக்கொண்டிருந்த அட்லிக்கு புது தோழிகள் சமந்தா-எமி ஜாக்ஸன் நினைவுக்கு வந்தனர். அவர்களை தனது படத்துக்கும் தேர்வு செய்துவிட்டார். இரண்டு படங்களிலுமே ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். மே மாதம் மத்தியில் இதன் படப்பிடிப்பு முடிய உள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் முதல் அட்லி இயக்கத்தில் விஜய் ஷூட்டிங் தொடங்க உள்ளது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top