‘‘இது தமிழ் சினிமாவில் ஹாரர் பட சீசன். என்னுடைய படமும் அந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் மற்ற படங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய புது விஷயங்களைச் சேர்த்திருக்கிறேன்.
ஸ்ரீகாந்த் இதில் டபுள் ஆக்ஷன் பண்றார். அவருடைய ஹிஸ்ட்ரியிலும் சரி, என்னுடைய ஹிஸ்ட்ரியிலும் சரி இது முக்கியமான படமாக இருக்கும். கதை சொன்னதும் எந்தவித யோசனைக்கும் இடம் கொடுக்காமல் படத்தை உடனே ஆரம்பிக்கலாம் என்று நம்பிக்கை கொடுத்தார்.அதே அனுபவம்தான் ராய்லட்சுமியிடம் கதை சொன்னபோதும் கிடைத்தது. இவர்களோடு சுமன், சரவணன், மனோபாலா, சிங்கம்புலி, பவர் ஸ்டார், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், வடிவுக்கரசி, கோவை சரளா என பெரிய ஆர்டிஸ்ட்டுகள் இருக்கிறார்கள்.
இசை ஜான்பீட்டர். தெலுங்கில் ஹிட் படங்களில் வேலை செய்த ஒளிப்பதிவாளர் சீனிவாச ரெட்டியை தமிழில் அறிமுகப்படுத்துகிறேன். ‘மைனா’, ‘சாட்டை’ ஹிட் படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ் இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இது பேய்ப் படமாக இருந்தாலும் குழந்தைகளும் ரசிக்கும்படியான ஜனரஞ்சகமான படமாக இருக்கும்” என்கிறார் வடிவுடையான்.
0 comments:
Post a Comment