↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
trisha, kamal
கமலின் உத்தம வில்லன் படம் அடுத்த மாதம் 1ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதை தொடர்ந்து பாபநாசம் படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் கமல் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார்.

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்க இருக்கிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே மன்மத அம்பு படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
கமலே தயாரிக்க இப்படத்தில் பிரகாஷ் ராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இதன் படப்பிடிப்பு மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top