↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா புதிதாக இணையதளம் மூலம் நகை வடிவமைக்கும் தொழிலை ஆரம்பித்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தான் வடிவமைத்த நகைகளை அவர் ஆரம்பித்துள்ள இணையதளத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறார். நேற்றைய அட்சய திருதியை நாளில் ஏராளமான ஆர்டர்கள் இணையதளத்தின் மூலம் தமன்னாவுக்கு வந்ததாக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் தமன்னாவின் இந்த புதிய தொழில் முயற்சிக்கு கோலிவுட், டோலிவுட் திரையுலக பிரபலங்கள் நேரிலும் சமூக வலைத்தளங்கள் மூலமும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமன்னாவுடன் படிக்க்காதவன், வேங்கை ஆகிய படங்களில் நடித்த தனுஷ், நேற்று தனது சமூக வலைத்தளம் மூலம் தமன்னாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "தமன்னா என்னுடைய நல்ல தோழி. மனிதநேயம் மிக்கவர். அவருடைய இந்த புதிய தொழில் வெற்றியடைய வாழ்த்துக்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

தமன்னா தற்போது பாஹுபாலி, பெங்கால் டைகர், ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். மேலும் வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகின்றார். மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top