↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸான அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான 'என்னை அறிந்தால்' படத்தில் அஜீத்துக்கு சமமாக 'விக்டர்' என்ற வில்லன் கேரக்டரில் நடித்து அசத்திய அருண்விஜய் நடித்துள்ள அடுத்த படமான 'வா டீல்' படம் தற்போது 'வா' என டைட்டிலை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றும் இன்றும் இந்த படத்தின் பேப்பர் விளம்பரங்களில் 'வா' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் டைட்டில் வைத்தால் மட்டுமே தமிழக அரசின் வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் இந்த பெயர் மாற்றம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் 'வா' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறவுள்ளது. அருண்விஜய் நடித்த வெற்றிப்படமான 'தடையற தாக்க' படத்திற்கு இசையமைத்த தமன், இந்த படத்திலும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண்விஜய், கார்த்திகா நாயர், வம்சி கிருஷ்ணா, சதீஷ், ஜெயப்பிரகாஷ், ரேணுகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரத்னசிவா என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். முதலில் இந்த படம் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மே இறுதியில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top