செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நடிகர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகரா அல்லது ஆந்திராவைச் சேர்ந்தவரா என்று தெரியவில்லை. ஆனால், செம்மர கடத்தல் விவகாரத்தில் நடிகர் ஒருவரைப் போலிஸார் பிடித்து விசாரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆந்திரப் போலிசார் தரப்பிலும் இதுகுறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் இந்த விவகாரத்தில் தற்போது குழப்பம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செம்மரக்கடத்தல் வழக்கில் தன் பெயர் பரப்பபடுவது குறித்து நடிகர் சரவணன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கவுள்ளார்.
திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திர அதிரடிப்படை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.
தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் போலிசார் தீவிர விசாரணையிலும் கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவரும் நேரத்தில் நடிகர் சரவணனையும் கைது செய்துள்ளதாக வலைத்தளங்களில் தகவல் பரவியுள்ளது.
இந்நிலையில், செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் தேவையில்லாமல் தன் பெயரை பரப்பி வருவதாக நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று அவர் இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment