↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்தியாவின் சிறந்த ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஸ்வின் விளங்குவதாக சுழற்பந்து ஜாம்பவான் முத்தய்யா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தய்யா முரளிதரன் ஐபிஎல் டி20 வெப்சைட்டில் இதுகுறித்து எழுதியுள்ளார். முரளிதரன் மேலும் கூறுகையில், தற்போதைய சர்வதேச கிரிக்கெட்டில், நிறைய தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் உள்ளனர். அஸ்வின், ஹர்பஜன்சிங், பாகிஸ்தானின் சையது அஜ்மல், இலங்கையின் ரங்கனா ஹீரத் போன்றோர் தலை சிறந்த ஸ்பின்னர்களாகும்.
இந்தியாவை பொறுத்தளவில் அஸ்வின் சிறந்த ஸ்பின்னராக செயல்பட்டு வருகிறார். அவரிடம் நிறைய திறமைகள் உள்ளன. இந்திய அணிக்காக அவர் தொடர்ச்சியாக ஆடி வருகிறார். ஹர்பஜன்சிங்கும், தனது டச்சில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
சையது அஜ்மல் பந்து வீச்சில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆனால் அதிலிருந்து அவர் மீண்டுவிட்டார். இலங்கை பந்து வீச்சாளர்களில் ஹீரத் கவனம் ஈர்க்கிறார்.
ஹைதராபாத் அணியை பொறுத்தளவில் காஷ்மீரை சேர்ந்த பர்வேஸ் ரசூல் சிறப்பான ஸ்பின்னராக உள்ளார். ஆனால் அவர் குறித்து கருத்து கூற இன்னும் சில போட்டிகளை உற்று பார்க்க வேண்டியது அவசியம்.
ஐபிஎல் கிரிக்கெட் இளைஞர்களுக்கும், திறமையானவர்களுக்கும் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தரும். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு கவனம் ஈர்ப்பவர்களுக்கு அந்தந்த நாடுகளில் ஆட வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு முத்தய்யா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Home
»
»Unlabelled
» இந்தியாவின் பெஸ்ட் ஸ்பின்னர் ஹர்பஜன்சிங்கா, அஸ்வினா..? முரளிதரன் சொல்வதை கேளுங்க!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment