↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
c218
சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், நந்திதா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆந்திரா மாநிலத்தில் நடந்து வருகிறது. ஆந்திர மாநிலத்தின் தலக்கோணம் பகுதியில் அரசர் கால வீடுகள் போன்று செட்டுகள் போடப்பட்டு நடந்து வருகிறது.
இந்நிலையில் விஜய் இப்படத்தில் முதல்முறையாக குள்ளராக 3அடியில் நடிக்கிறாராம். இதற்காக அதிநவீன முறையில் காட்சிகள் அமைக்கப்பட்டு வருகிறதாம். கமல் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நடித்தது போன்ற கெட்டப் எனக் கூறப்படுகிறது.
3 அடி விஜய்க்கு பாடல் காட்சியும் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கெட்டப் ரகசியத்தை படக்குழு வெளியே விடாமல் இருந்தனராம் எனினும் பரவியுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் விஜய்யின் இந்த 3அடி கெட்டப் எதிர்ப்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top