ஜெயம் ரவி தற்போது ரோமியோ ஜுலியட், அப்பா டக்கர், தனி ஒருவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து சக்தி ராஜன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும் படவாய்ப்பை தீவிரமாக தேடி வந்தார் லட்சுமி மேனன். அஜித்-சிவா படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய இயக்குனர் சக்தி ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் இப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்துவருவதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment