ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளாராக செளந்தர்யா ரஜினிகாந்த் பொறுபேற்றவுடன் இந்த நிறுவனம் தமிழ், தெலுங்கு ஆகியவற்றில் வெளியாகும் முக்கிய படங்களின் உரிமை மற்றும் பாடல்களின் உரிமைகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக ஈராஸ் நிறுவனம் மலையாள திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளது.
கடந்த வருடம் வெளியான சூப்பர் ஹிட் படமான த்ரிஷய்ம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கிவரும் 'லைப் ஆப் ஜோசுட்டி (life of josutty) என்ற படத்தின் உரிமையை ஈராஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள செளந்தர்யா ரஜினிகாந்த், 'மலையாள திரையுலகில் தங்கள் நிறுவனம் நுழைந்துள்ளது குறித்து தாம் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வரும் மலையாள திரையுலகில் முக்கிய இயக்குனர்களின் படங்களை தயாரிக்க ஈராஸ் முன்வந்திருப்பதாகவும், அதன் முதல்படியாக ஜீத்து ஜோசப்பின் படத்தை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெயலால் மேனன் கூறும்போது, 'இந்திய அளவில் புகழ்பெற்ற ஈராஸ் நிறுவனத்துடன் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு திரைப்படம் இணைவதில் தாம் பெருமை அடைவதாக கூறினார். ஈராஸ் நிறுவனத்தின் இந்த முயற்சி மலையாள படங்களை உலக அளவில் எடுத்து செல்ல உதவும் என்றும் அவர் கூறினார். |
மலையாள திரையுலகிலும் நுழைந்தது ஈராஸ்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment