↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பனிவிழும் மலர்வனம், ஒருவர் மீது இருவர் சாய்ந்து உள்பட சில படங்களில் நடித்தவர் சானியதாரா. ஆரம்பத்தில் தனது பெயரை சானியா 
என்று வைத்திருந்த இவர், பின்னர் நயன்தாரா பாணியில் சானியதாரா என்று பெயரை மாற்றிக்கொண்டார். அதையடுத்து, தற்போது நயன்தாரா யாருக்கெல்லாம் எட்டாத கனியாக இருக்கிறாரோ அவர்களெல்லாம் சானியதாராவைதான் புக் பண்ணி வருகிறார்கள். குறிப்பாக, பா.விஜய் நடிக்கும் தகடு தகடு, விஜய்வசந்த் நடிக்கும் ஜிகினா போன்ற படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் சானியதாரா. முந்தைய படங்களில் அடக்க ஒடுக்கமாக நடித்த அவர், தகடு தகடு படத்தில் கவர்ச்சி மழை பொழிந்திருக்கிறார். குறிப்பாக, பாடல் காட்சிகளில் இளவட்ட ரசிகர்களை வசியம் பண்ணும் வகையில் நடித்துள்ளாராம் சானியதாரா.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, சினிமாவைப்பொறுத்தவரை ஹீரோயினிகளை நடிப்புக்கு பயன்படுத்துவதை விட கிளாமருக்குத்தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். எனக்கும் அந்த மாதிரியான படங்களே கிடைத்து வருகின்றன. அதனால் கிடைக்கிற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில், ஆபாசத்தின் எல்லையை தொடாத கிளாமரை வெளிப்படுத்தி வருகிறேன். அதிலும் பா.விஜய்யுடன் நடித்து வரும் தகடு தகடு படத்தில் எனது கவர்ச்சிகரமான நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் கவரும் என்று கூறும் சானியதாரா, மார்ச் மாதம் தகடு தகடு திரைக்கு வருகிறது. அதன்பிறகு தமிழ் சினிமாவில் நானும் பேசப்படும் நடிகையாகி விடுவேன் என்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top