↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad போலீஸ் கதைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு கேங்ஸ்டராக நடிக்கிறார் டாக்டர் ராஜசேகர். கெட்டம் கேங் தெலுங்கு படத்தில்தான் இப்படி நடிக்க உள்ளார். இந்த படம் தமிழில் வெளியான சூது கவ்வும் படத்தின் ரீமேக். இதில் விஜய் சேதுபதி ஏற்ற வேடத்தில் ராஜசேகர் நடிக்கிறார்.

 சூது கவ்வும் படத்தில் நயன்தாராவின் தீவிர ரசிகரான பாபி சிம்ஹா, அவருக்கு சிலை வைப்பது போல் ஒரு காட்சி வரும். இந்த காட்சியை சமீபத்தில் படமாக்கினார்கள். அப்போது நயன்தாராவுக்கு பதிலாக அனுஷ்காவின் சிலை வடிவமைக்கப்பட்டது. இதில் பாபி சிம்ஹா கேரக்டர், அனுஷ்காவின் ரசிகரை போல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே அனுஷ்காவின் சிலை படத்தில் பயன்படுத்தினார்கள். 

இதற்காக அனுஷ்காவிடம் அனுமதி வாங்கினார்களாம். இந்த படம் இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது. அப்போது இந்தியில் ஐஸ்வர்யா ராய்க்கு சிலை வைப்பது போல் காட்சியை வைக்க அப்படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அனுஷ்கா, விரைவில் கன்னடத்திலும் அறிமுகம் ஆவார் என கூறப்படுகிறது. தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க அவரிடம் பேசி இருக்கிறார்கள். சம்பளம் கட்டுப்படியாகிவிட்டால் இதில் அனுஷ்கா நடிப்பாராம்.

 அனுஷ்காவுக்கு சிலை வைக்கிறார் ராஜசேகர்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top