↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நாகார்ஜுன் - கார்த்தி இணைந்து நடிக்கும் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் முதல்முறையாக நடிக்கவுள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படம் குறித்தும் ஸ்ருதிஹாசன் குறித்தும் கார்த்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றை குறித்து பார்ப்போம்.

'நான் நடிக்கும் காஷ்மோரா' படத்திலேயே எனக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் அது நடக்கவில்லை. இந்நிலையில் நாகார்ஜுனனுடன் நான் நடிக்கும் தெலுங்கு படத்தில் எனக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கேள்விப்பட்டவுடன் மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.

இந்த படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு வித்தியாசமான ரோல். வழக்கமான படத்தில் வருவதுபோல் ஹீரோவுடன் டூயட் மட்டும் பாடிவிட்டு செல்லும் சாதாரண கேரக்டர் இல்லை.

என்னுடைய 'பையா', நான் மகான் அல்ல' உள்பட பல படங்கள் தெலுங்கில் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் முதன்முதலில் நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பது எனக்கு ஒரு புது அனுபவமாக உள்ளது. அதிலும் நாகார்ஜுனன் போன்ற சீனியர் நடிகருடன் நடிப்பது எனக்கு பெருமையாகவும் உள்ளது.
இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top