↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நான், சலீம் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை அடுத்து விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் இந்தியா-பாகிஸ்தான். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்டமாக ஒரு பாடல் காட்சியை படமாக்க, படக்குழுவினர் ஓமன் நாட்டிற்கு செல்லவுள்ளனர். ஜனவரி 11ஆம் தேதி முதல் ஓமனில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், படத்தை பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தற்போது பதட்டமான சூழ்நிலை இருக்கும் நிலையில் இந்த படம் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், பசுபதி, ஜெகன், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள இந்தியா - பாகிஸ்தான் படத்திற்கு தீனா தேவராஜன் இசையமைக்கின்றார். விஜய் ஆண்டனி தயாரிக்கும் இந்த படத்தை என்.ஆனந்த் இயக்கி வருகிறார்.

திருடன், சைத்தான், பிச்சைக்காரன் ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top