↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சினிமா தவிர விளம்பர படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார் காஜல் அகர்வால். இலியானா, அசின், அனுஷ்கா, ஸ்ரேயா போன்றவர்களும் விளம்பரங்களில் நடிக்கின்றனர். தவிர குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு வர்த்தக நிறுவனங்கள் திறப்பு விழாக்களிலும் பங்கேற்கின்றனர். சமீபத்தில் ஐதராபாத்தில் திறப்பு விழா ஒன்றுக்கு காஜல் அகர்வால் வரவுள்ளதாக அவரது புகைப்படங்களுடன் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் திடீரென்று வேறு நடிகை திறப்பு விழாவில் பங்கேற்றார்.
இதில் கோபம் அடைந்த காஜல் அகர்வால் பட்டாசாக வெடித்திருக்கிறார்.

‘திறப்பு விழாவுக்கு என்னுடைய பெயரையும், போட்டோக்களையும் பயன்படுத்தியவர்கள் திடீரென்று வேறு நடிகையை அழைத்திருக்கிறார்கள். எனக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு கூட தரவில்லை. இதுதொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்Õ என குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் சம்பந்தபட்ட நிறுவனமோ, ‘காஜல்தான் எங்களை மோசடி செய்துவிட்டார். திறப்பு விழாவுக்கு வருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டார். கடைசி நேரத்தில் வர மறுத்துவிட்டார். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. சட்டப்படி நாங்களும் பதிலடி தருவோம்Õ என்கிறது. 



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top