2014-ம் ஆண்டுக்கான சிறந்த இசைக் கலைஞர்களுக்கான ஆஸ்கர் விருது இறுதி பட்டியலில் இந்திய இசையமைப்பாளர்-இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் இடம் பெறவில்லை.
முன்னதாக சென்ற மாதம் வெளியாகியிருந்த முன்னோட்ட பரிந்துரை பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் மூன்று படங்களுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
‘கோச்சடையான்’ படத்தின் சிறந்த இசை அமைப்புக்காக ரஹ்மானின் பெயர் பட்டியலில் இருந்தது.
மேலும், ’தி 100 ஃபூட் ஜார்னி’, மற்றும் ’மில்லியன் டாலர் ஆர்ம்’ ஆகிய படங்களின் சிறந்த இசையமைப்புக்காகவும் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று வெளியாகியிருக்கும் ஆஸ்கர் விருதுகள் 2015 – இறுதி பரிந்துரை பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் இடம் பெறவில்லை.
அந்த இறுதிப் பட்டியலில்
Alexandre Desplat, “The Grand Budapest Hotel”
Alexandre Desplat, “The Imitation Game”
Hans Zimmer, “Interstellar”
Gary Yershon, “Mr Turner”
Jóhann Jóhannsson, “The Theory of Everything”
Alexandre Desplat, “The Imitation Game”
Hans Zimmer, “Interstellar”
Gary Yershon, “Mr Turner”
Jóhann Jóhannsson, “The Theory of Everything”
ஆகியோரின் பெயரே இடம் பிடித்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கெனவே 2008-ம் ஆண்டு ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
மேலும் 2010-ம் ஆண்டில் ’127 hours’ படத்தின் இசையமைப்பிற்காக ஆஸ்கர் விருதின் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment