'அஜித் தனது படங்களுக்கு ஏதும் பேட்டிக் கொடுக்கிறாரா... பிறகு நான் ஏன்?' என்று ஜெய் கேள்வி எழுப்பி வருகிறார்.

அஜித் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு பேட்டிகள், படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் என எதையும் செய்வதில்லை. எப்போதுமே தனது படங்கள் நன்றாக இருந்தால் ஒடப்போகிறது என்று நினைப்பார். அவருடைய படங்கள் எப்போதுமே வசூல் ரிதியில் முதல் மூன்று நாட்கள் கோடிகள் புரளும்.
இந்நிலையில், தற்போது அஜித் வழியை நடிகர் ஜெய்யும் பின்பற்றி வருகிறார். தன்னுடைய படங்களின் விளம்பரப்படுத்தும் பணிகள் என எதிலும் கலந்துகொள்வதில்லை. இதனால் சில தயாரிப்பாளர்களுக்கும் ஜெய்க்கும் இடையே பனிப்போர் நடைபெற்றுள்ளது.

"அஜித் படத்துக்கு பேட்டிகள் என எதுவும் கொடுக்கிறாரா? அவருடைய படங்கள் கோடி கோடியாக வசூல் ஆகிறது. பிறகு நான் மட்டும் ஏன் பேட்டிகள் எல்லாம் கொடுக்க வேண்டும்?" என்று தயாரிப்பாளரிடம் கூறி இருக்கிறார்.

"முதலில் அஜித்தின் மார்க்கெட் என்ன... இவருடைய மார்க்கெட் என்ன? இது தெரியாமல் இப்படி இருக்கிறாரே" என்று புலம்பிக் கொண்டே நகர்ந்திருக்கிறார்.

ஜெய்யின் இந்த முடிவு, தற்போது படங்கள் தயாரித்து வரும் பல்வேறு தயாரிப்பாளர்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.