↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழ் சினிமா உலகில் தற்போது ஒரு படம் ரிலீஸாகவுள்ள கடைசி நேரத்தில் அந்த படத்திற்கு எதிராக வழக்கு போடுவது அல்லது போலீஸ் புகார் கொடுப்பது போன்ற டிரண்ட் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
துப்பாக்கி, கத்தி, லிங்கா, ஐ, ஆம்பள என ஸ்டார் படங்கள் இந்த சோதனையை சந்தித்து வரும் நிலையில் இந்த லிஸ்ட்டில் தனுஷின் அனேகன் திரைப்படமும் தற்போது இணைந்துள்ளது.
நேற்று மதுரை நகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் அவர்களை சந்தித்த 50 சலவை தொழிலாளிகள், 'தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் தனுஷ் மற்றும் ஜெகன் பேசும் சில வசனங்களில் தங்கள் இன பெண்கள் குறித்த இழிவான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் தங்கள் மனம் புண்பட்டுள்ளது என்றும் இந்த படம் வெளிவந்தால் தங்கள் இனப்பெண்கள் மிகுந்த கேலிக்குள்ளாவார்கள் என்றும் மனு ஒன்றை கொடுத்து படத்தை தடை செய்யும்படி வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தனுஷ், மற்றும் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யும்படியும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சலவை தொழிலாளிகள் அனேகன் படத்திற்கு எதிராக கொடுத்துள்ள மனுவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment