யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யவில்லை. அவருடைய கொலைக்கு யோகேஸ்வரன் காரணமாக இருந்தார். துரையப்பாவை வேறு சிலரே கொலை செய்தனர் என புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் வேல்முருகு தங்கராசா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த புதிய அமைப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
துரையப்பா சுடப்பட்டபோது நான் அவருடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் அன்றைய தினம் சிறீதர் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தமையினால் தப்பித்தேன்.
பின்னர் என்னை கொட்டடியில் சுடப்பார்த்தார்கள். மேலும் துரையப்பாவை சுட்டவர் பிரபாகரன் இல்லை. அவரை சுட்டது.
காண்டீபன் மற்றும் இன்பம் ஆகியோரே.
அவர் சுடப்பட்டபோது பிரபாகரன் வீட்டரால் கலைக்கப்பட்டு, துரையப்பா விளையாட்டரங்கிற்குள் காருக்குள் தான் பிரபாகரன் வாழ்ந்தார்.
துரையப்பா சுடப்பட்டதன் பின்னர் என்னிடம் பிரபாகரன் வந்து அண்ணே என்ன நடந்தது? என கேட்டார். அப்போது துரையப்பா சுடப்பட்டதாக நான் அவருக்கு கூறினேன்.
பின்னர் பிரபாகரன், யோகேஸ்வரன் வீட்டில்போய் தங்கினார். துரையப்பா சுடப்பட்டதற்கு முழு காரணம் யோகேஸ்வரனே என விளக்கமளித்தார்.
0 comments:
Post a Comment