பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்தரிக்கை அலுவலகத்திற்குள், கடந்த வாரம் புகுந்த செரிப் குவாச்சி மற்றும் சயித் குவாச்சி சகோதரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பத்திரிக்கை ஆசிரியர், கேலிச்சித்திரம் வரைபவர்கள்(Cartoonist) உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.
நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கேலிச்சித்திரத்தை வெளியிட்டதால் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று வெளியாகவிருக்கும் சார்லி ஹெப்டோவின் சிறப்பு பதிப்பில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்கள் நிச்சயமாக இருக்கும் என சார்லி ஹெப்டோவின் வழக்கறிஞர் நேற்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வரும் 14ம் திகதி(புதன்கிழமை) வெளியாக உள்ள பத்திரிகையின் சிறப்பு பதிப்பின் அட்டைப் படத்தில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம் இருக்கும்.
அச்சித்திரத்தில் நபிகள் நாயகத்தின் கையில் ஜெஸ்யூஸ் சார்லி, அனைத்தும் மன்னிக்கப்பட்டது என்ற வாசகம் அடங்கிய அட்டை இருக்கும் என கூறியுள்ளார்.
மேலும் எங்களை அடக்க நினைக்கும் தீவிரவாதிகளுக்கு அஞ்ச மாட்டோம் என்பதை நிரூபிக்கவே மீண்டும் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை வெளியிடுகிறோம் என சார்லி ஹெப்டோ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment