நாமல், யோசித்த, ரோஹித்த ஆகிய தமது புதல்வர்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம்என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த கோரிக்கைக்கு இணக்கம் ஏற்பட்டுத்தப்பட்ட பின்பு தான் , ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்கு தாம் இணங்கியதாக மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் ஊடாக மகிந்த ராஜபக்ச இந்தத் தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றிரவு சபாநாயகர் சமல் ராஜபக்சவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்ததாகவும், ராஜபக்சவினர் மீது மேற்கொள்ளப்படும் இடையூறுகள் குறித்து இதன்போது சமல் ராஜபக்ச ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாகவும் தெரியவருகிறது.
0 comments:
Post a Comment