முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராபஜக்சவின் நடவடிக்கைகளின் காரணமாகவே, முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவினார் என கடுவல நகரசபைத் தலைவர் ஜீ.எச்.புத்ததாச தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவின் நடவடிக்கைகளினால் மஹிந்த ராஜபக்ச ஐயாவிற்கு இந்த நிலைமை ஏற்பட்டது.
பசில் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார். எனினும் நாங்கள் கட்சியை விட்டு வெளியேறவில்லை.
என்றாவது மரணிக்கும் வரையில் நாம் சுதந்திரக் கட்சியிலேயே அங்கம் வகிப்போம்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது நான் ஒரம் கட்டப்பட்டேன்.
கொழும்பில் முதன் முதலாக நானே கட் அவுட்களை வைத்தேன்ää பாத யாத்திரை சென்றேன்.
எனினும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற காலத்தில் எனக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்ற ரீதியில் தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தேன்.
தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் காரணமாகவே மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார்.
நகரசபைத் தேர்தலின் போது விமல் வீரவன்ச தனது ஆதரவாளர் ஒருவரை களமிறக்கி என்னை தோல்வியடையச் செய்ய முயற்சித்தார்.
எனினும், மைத்திரிபால சிறிசேன எனக்கு பக்கபலமாக நின்றது மட்டுமன்றி தேர்தல் மேடைகளிலும் ஏறி பிரச்சாரம் செய்தார்.
அந்த நன்றிக் கடனுக்காக நான் அவருக்கு இப்போது ஆதரவளிக்கின்றேன் என புத்ததாச அண்மையில் நகரசபைக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment