↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
திரையுலகம் பொறுத்தவரை குடும்பம் குடும்பாக சினிமாவிற்குள் நுழைந்து கொண்டே தான் இருப்பார்கள். அந்த வகையில் பாலிவுட்டில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என வரிசை கட்டி வருவார்கள். இது கோலிவுட்டில் கொஞ்சம் குறைவு தான் இருந்தாலும் தமிழ் சினிமாவை கலக்கிய பிரதர்ஸ்-சிஸ்டர்ஸ் பற்றிய தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய்-விக்ராந்த் :
இருவரும் ஒரு தாய் பிள்ளைகள் இல்லை என்றாலும் கசின் முறையில் அண்ணன், தம்பி தான். அச்சு அசல் விஜய் ஜாடைலியேலே தமிழ் சினிமாவிற்கு வந்து தோல்வியை மட்டும் சந்தித்து வந்து தற்போது பாண்டிய நாடு மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து விட்டார். ஆனால், ஒரு அண்ணனாக எனக்கு விஜய் ஏதும் செய்தது இல்லை என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.
சூர்யா-கார்த்தி :
தமிழ் சினிமாவின் மோஸ்ட் சக்சஸ் புல் பிரதர்ஸ் இவங்க தான். அண்ணன் தம்பி தமிழ் சினிமாவை குத்தகைக்கு எடுத்து ஹிட் அடித்து வந்தனர். ஆனால், யார் கண் பட்டதோ சில நாட்களாக மாறி, மாறி தான் ஹிட் கொடுக்கிறார்கள். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள். அதேபோல் அஞ்சானில் அண்ணன் விட்டதை மெட்ராஸில் தம்பி பிடித்து விட்டார்.
வெங்கட் பிரபு-ப்ரேம் ஜி :
மோஸ்ட் கிரேஸி பிரதர்ஸ் அப்படின்னு சொல்லலாம். படத்தில் கதையே இல்லை என்றாலும் கண்டிப்பாக வெங்கட் பிரபு அவரது தம்பி இல்லாமல் படம் எடுக்கமாட்டார். யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைப்படாமல் என் தம்பியை வைத்து நான் படம் எடுக்கிறேன், உங்களுக்கு என்ன என்று கூறி என்றுமே குட் பிரதர்ஸ் லிஸ்டில் உள்ளவர்கள்.
செல்வராகவன் -தனுஷ் :
தனுஷ் இன்று இந்த நிலைமையில் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அதற்கு காரணம் அவரது அண்ணன் செல்வா தான். இதை பல மேடைகளில் அவரே கூறியிருக்கிறார். தன் தம்பியை ஒரு சிலையை போல் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியவர்.
விஷ்ணுவர்தன்-கிருஷ்ணா :
பில்லா, ஆரம்பம் போன்ற தல படங்களை இயக்கி ஸ்டைலிஷ் இயக்குனர் என்ற பெயரெடுத்தவர் விஷ்ணுவர்தன். அவருடைய தம்பி நடிகர் கிருஷ்ணா. இவர்கள் இரண்டு பெரும் அண்ணன், தம்பி என்பதே பல பேருக்கு தெரியாது. முதலில் சில படங்கள் தோல்வியை கொடுத்தாலும் அந்த நேரத்தில் தன் அண்ணனை தேடி போகாமல் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்த பலரது பாராட்டுகளை பெற்றார். இன்று பெயர் சொல்லும் ஓர் அளவுக்கு வளர்ந்து பிறகு தான் அண்ணன் இயக்கத்தில் யட்சன் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார்.
ஜெயம் ரவி-ஜெயம் ராஜா :
மோஸ்ட் லவ்வபுள் பிரதர்ஸ். தன் தம்பியை ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாக்கி, தானும் இயக்குனராக அறிமுகமாக வெற்றி அடைந்தார் ராஜா. என் அண்ணன் எனக்கு சினிமாவில் 5 முறை கரை ஏற்றியுள்ளார் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார் ரவி.
சிம்பு-குறளரசன் :
சிம்புக்கு தம்பி இருக்கு என்பதையே பலரும் மறந்து விட்டனர். சிம்புவையே இங்கு யாருக்கு நியாபகம் இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால், தம்பி குறளரசன் மீது சிம்புக்கு ஏகப்பட்ட பிரியம். இதன் காரணமாகவே தான் அடுத்து நடிக்கும் இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த இருக்கிறார்.
கார்த்திகா-துளசி :
80களில் தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட அம்பிகா-ராதா. இதில் ராதாவின் வாரிசு கார்த்திகா-துளசி தற்போது அறிமுகமாகியுள்ளனர். ஆனால், அவர்கள் அளவிற்கு இவர்களால் சினிமாவில் சாதிக்க முடியவில்லை என்பதே வருத்தம். இருந்தாலும் பெற்றோர்கள் பெயரை கலங்கப்படுத்தாத அளவிற்கு நல்ல படங்களாக தான் இருவரும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top