↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கடந்த வருடம் 08.04.2014 இல் ஆரம்பித்து ஒரு மாதம் முடிவடையும் வரை இலங்கையின் இன்றைய பிரதம ரணில் விக்ரமசிங்க அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் ஆட்சி மாற்றம் தொடர்பான பயிற்சி ஒன்றைப் பெற்றுக்கொண்டார். நிறைவேற்று அதிகாரம் நீங்கிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக ரணில் விக்ரமசிங்க ஒரு மாதகால பயிற்சியை எம்.ஐ.ரி ((MIT) Massachusetts Institute of Technology)என்ற அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டார். அப் பல்கலைக் கழகத்திலிருந்து பெறப்பட்ட தகவல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவை அதிகாரத்தில் அமர்த்துவதற்கு அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகள் பின்னணியில் செயற்பட்டன. இலங்கையில் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் வியாபாரக் கொள்ளைக்குத் தடையாக அமைந்த போர்ச் சூழலை மகிந்த அரசைப் பயன்படுத்தியே ஏகாதிபத்திய அரசுகள் அழித்தன. புலிகளை அழித்தும், இனப்படுகொலை நிகழ்த்தியும் இலங்கை அரச எதிர்ப்பு அழிக்கப்பட்டது. இதற்கான ஆதாரங்களை விக்கிலீக்ஸ் உட்பட பல்வேறு அமைப்புக்கள் வெளியிட்டிருந்தன.
புலிகள் ஏகாதிபத்தியக் கொள்ளைக்குத் தடையாக அமைந்தது போன்றே மகிந்தவின் சர்வாதிகாரமும் குறித்த எல்லைக்கு அப்ப்பால் தடையாக அமைந்தது. இதனால் இலங்கையில் வளங்களைக் கொள்ளையிடவும், உழைப்பைச் சூறையாடவும் ஏகாதிபத்தியங்கள் விரும்பும் ‘ஜனநாயகம்’ தேவைப்பட்டது.
அதற்காகத் தயாரிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர் ரணில் விக்கிரமசிங்க. தேர்தல் ஆரம்பித்த நாள் முதலே அமெரிக்கா தலைமையிலான அரசுகளின் தலையீடு காணப்பட்டமை அனைவரும் அறிந்தததே. அதற்கு முன்பிருந்தே இத்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளமை ரணில் ஆய்வு தெளிவுபடுத்துகின்றது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top