விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டமுடன் வெளிவர இருக்கும் இந்த புதிய பிரவுசர் ஸ்பார்டன் என்ற குறீயிட்டில் உள்ளது.
இது இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் மேம்பாட்டு தொகுப்பாக இல்லாமல் புதிய ஒன்றாக இருக்கும். சபாரி மற்றும் குரோம் பிரவுசர்கள் வெப்கிட் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
ஆனால் ஸ்பார்டன் பிரவுசர் Chakra JavaScript engine and Trident rendering engine கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதில் மொபைல் போன்களில் இயங்கும் பதிப்பும் கிடைக்கும்.
குரோம், பயர்பாக்ஸ் போன்று ஹார்ட் டிஸ்க்கில் மிகக் குறைந்த இடத்தையே இது எடுத்துக் கொள்ளும். ஆனால் ஆண்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்ற சிஸ்டங்களில் இதன் செயல்பாடு குறித்த தகவல் இல்லை.
வருகின்ற ஜனவரி 21ம் திகதி மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 வெளியிடுகையில், இதில் உள்ள பல வசதிகள் குறித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.