காதல், அதை தொடர்ந்து வரும் மோதல், பின் மீண்டும் காதல் இது தான் ஒரு உண்மையான காதலுக்கு அர்த்தம், இதை தன் உனக்கே உயிரானேன் குறும்படத்தில் வயது கடந்த தம்பதியர்களை வைத்து இயக்கிய இயக்குனரின் அடுத்த படைப்பு தான் இந்த ஹைக்கூ நீ.
இன்றைக்கு நாம் எதிர்ப்பார்ப்பது அனைத்தும், யாராவது நம்மிடம் அன்பு செலுத்துவார்களா என்று தான், அதிலும் அந்த அன்பு எதிர் பாலினத்திடம் இருந்து கிடைத்தால் அதற்கு இன்னும் சந்தோஷம் அதிகம்.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள், ஆனால், அதற்கும் மூளையும் இல்லை, இதை தான் இயக்குனர் இக்குறும்பட டீசரின் முடிவில் ‘ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலித்தால், காதல் எப்போதே அழிந்திருக்கும் என மிக அழகான, மெச்சூரான வசனங்கள் மூலம் கூறியுள்ளார்.
இன்னும் சில நாட்களில் காதல் தினம் வரும் நிலையில் இந்த குறும்பட வருகை காதலர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இக்குறும்படத்தில் டைட்டிலை தொடர்ந்து சில கெட்ட வார்த்தைகள் இடம்பெறுகிறது.
கெட்ட வார்த்தை நம் காதலை இன்னும் நெருக்கத்தில் கொண்டு செல்லும், என்பது போல் தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன், படம் வந்தால் தான் அதற்கான முழு விளக்கம் தெரியும்.
விரைவில் ஹைக்கூ ’நீ’ வரவேண்டும், வெற்றிகளை தொடவேண்டும் என சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment