அஜீம், ஜோதிகா நடிப்பில் முகவரி என்ற படத்தை இயக்கியவர் வி.இசட். துரை.
இப்படத்திற்கு பிறகு இவர் காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேபாளி போன்ற படங்களை இயக்கி இருந்தார். கடைசியாக கூட ஷாமை வைத்து 6 என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்காக ஷாம் மற்றும் துரை அதிக அளவில் உழைந்திருந்தனர். ஆனால் அப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் நடிகரை வைத்து தான் படம் இயக்க வேண்டும் என்று முடிவு செய்த துரை விஜய் சேதுபதியை அணுகி இருக்கிறார்.
கையில் அரை டஜன் படங்களை கையில் வைத்துக் கொண்டு இருக்கும் விஜய் சேதுபதி, துரை அவர்களின் கதையை கேட்டுவிட்டு, இப்படத்தில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் நடிக்கிறேன் என்று கூறிய விஜய் சேதுபதி, இன்னும் கால்ஷீட் தரவில்லையாம். இதனால் விஜய் சேதுபதி எப்போது கால்ஷீட் தறுவார் என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் துரை.
0 comments:
Post a Comment