சில நேரங்களில் தலைசுற்றல் அல்லது வயிற்றுவலி போன்ற சில உடல் உபாதைகளுக்கு கூட மாத்திரை சாப்பிடுகிறோம்.
ஆனால் இது எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமானது என்ற உறுதியாக கூறமுடியாது. ஏனெனில் ரசாயன தன்மை மிகுந்த மாத்திரைகள் சில நேரங்களில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.
எனவே வீட்டிலிருந்தபடியே சில மருத்துவ குறிப்புகளை நாம் தெரிந்து கொண்டு கையாள்வது நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
எளிமையான சில மருத்துவ குறிப்புகள்
* நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.
* வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.
* மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.
* நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.
* வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்.
* மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
* திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். மேலும் தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.
* சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும்.
* பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.
* தேங்காய் எண்ணெயைத் கொஞ்சம் சூடாக செய்து, தலையில் தடவிவந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறைவதுடன் வெப்ப நோய்களும் தாக்காமல் இருக்கும்.
0 comments:
Post a Comment