
சமீபத்தில், தெலுங்கு நடிகர் நிதின் வீட்டில் அரங்கேறிய சம்பவம் தெலுங்கு திரையுலகத்தையே அதிர்ச்சியாக்கியுள்ளது.
ஹீரோவாகவும் பாடகராகவும் அனைத்து ரசிகர்களின் பார்வையை ஈர்த்தவர் நிதின். ஏறக்குறைய 13 ஆண்டுகளாக டோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
சென்ற வியாழக்கிழமை அன்று இரவு, 20 வயது மதிக்க தக்க ஒரு இளம் பெண் அவருடைய வீட்டிற்குள் தாவி குதித்துள்ளார்.
இரவு முழுவதும் வெளியிலேயே இருந்த அவரை காலையில் நிதினின் குடும்பத்தினர் விசாரித்துள்ளனர். அவர் அப்போது தான் நிதினை காதலிப்பதாகவும், அதை அவரிடம் கூறவே சுவர் ஏறி குதித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
குடும்பத்தினர் என்ன கூறியும் அவர் கேட்காததால், அவர்கள் உடனே போலீசிற்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீசார் அவரை அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
என்னதான் ரசிகையாக இருந்தாலும் சுவர் ஏறி குதிக்கும் அளவுக்கு, வெறித்தனம் எப்படி வந்தது என்று ஆச்சரியப்படுகிறது டோலிவுட் வட்டாரம்.
மேலும் அந்த பெண், போலிஸில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரியின் மகள் என்றும், அதனாலேயே போலீஸ் அவரை பற்றிய தகல்களை வெளியிடவில்லை என்றும் முணுமுணுக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.