↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கூடங்குளம் அருகே விதவைப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தந்த போலீஸ்காரர் கைது செய்யப் பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆவரைகுளத்தை சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி உஷா (31). கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணியாற்றி வந்த முருகேசன் சமீபத்தில் மரணமடைந்தார். 

அதனைத் தொடர்ந்து கணவர் இறந்ததற்கான பணப்பலன்களைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார் உஷா. அப்போது அவருக்கு தேவையான உதவிகளை ஆவரைகுளத்தை சேர்ந்தவரும் சங்கரன்கோவில் திருவேங்கடம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் முருகேசன் (46) என்பவர் செய்து வந்துள்ளார்.
உஷாவை கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு அழைத்துசெல்வது, தாலுகா அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ் பெற்று கொடுப்பது என தனது சொந்த செலவில் பல்வேறு உதவிகளை உஷாவிற்கு செய்து வந்துள்ளார் முருகேஷன். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட முருகேஷன், உஷாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தன் ஆசைக்கு இணங்குமாறு அவர் உஷாவை வலியுறுத்தியுள்ளார். 

ஆனால், அதற்கு உஷா மறுத்து விடவே, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, முருகேசன் உஷாவிடம், ‘நான் உனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவேன்' என மிரட்டியுள்ளார். மேலும் இதுவரை தான் செலவு செய்த பணத்தையும் திரும்ப கேட்டு உஷாவை அவர் நச்சரித்துள்ளார். 

முருகேஷனின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, இது குறித்து உஷா கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து முருகேசன் மீது பணம் கேட்டு மிரட்டியது, பெண் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top