நீங்கள் ஒரு திருமணமான ஆணின் மீது காதலில் இருந்தால், அவர் உங்களை அவரின் சந்தோஷத்திற்காக பயன்படுத்தி வருகிறாரா என்பதை முதலில் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அதனால் திருமணமான ஒரு ஆணுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்றால் உங்களின் சொந்த இடர்பாட்டில் செல்லுங்கள்.
திருமணமான பல ஆண்களுக்கும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து ஒரு மாற்றம் தேவைப்படுவதால், அவர்கள் வேறு ஒரு பெண்ணை நாடுவார்கள். தங்களுக்கு வீட்டில் கிளி மாதிரி நல்ல மனைவி இருந்தாலும் கூட அவர்களுக்கு வேறு ஒரு பெண்ணுடன் உறவு தேவைப்படும். அதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தாங்கள் இதற்கு முன் தவறான பெண்ணை தேர்ந்தெடுத்து விட்டதாக சில ஆண்கள் மிகவும் புத்திசாலித்தனமாக வலையை விரிப்பார்கள். நீங்கள் அதற்கு மயங்கி, அவ்வகையான ஆண்களின் ஏமாற்று வார்த்தைக்கு விழுந்து விட்டீர்கள் என்றால், கண்டிப்பாக அது நல்ல உறவாக அமையாது. சில நல்ல ஆண்களும் இருக்க தான் செய்கிறார்கள். அவர்கள் இதற்கு முன் மோசமான விதிக்கு பலியாகி இருந்திருக்கலாம்.
ஒரு ஆண் உங்கள் மீது உண்மையான காதலை கொண்டிருந்து, உங்களுக்காக தனக்கு பொருத்தமில்லாத மனைவியை பிரிந்து வந்து உங்களை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால், அவருடன் நீங்கள் டேட்டிங் செல்வதில் தவறில்லை. ஆனால் உங்களை அவர் தன் சந்தோஷத்திற்காக பயன்படுத்தி விட்டு, வேலை முடிந்தவுடன் தூக்கியெறிந்து விடுவார் என உங்களுக்கு பட்டால் அவருடன் டேட்டிங் செல்வதை தவிர்த்து விடவும்.
கள்ளத்தொடர்புகள் குற்றமாகும்
கள்ளத்தொடர்புகள் என்பது சட்டத்திற்கு புறம்பான குற்றம் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அவருடைய மனைவியிடம் நீங்கள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டால், தர்ம சங்கடமான சூழ்நிலையை சந்திப்பதோடு, சட்ட ரீதியாக தண்டிக்கவும் படுவீர்கள். அதனால் அவர் உங்களை தொடுவதற்கு முன் அவரின் மனைவியை விவாகரத்து செய்ய தயாராக இருக்கிறாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இருப்பினும் திருமணமான ஆணுடன் டேட்டிங் செல்வது ஆபத்தே.

அவர் சந்தர்ப்பவாதியாக இருக்கலாம்
சில ஆண்கள் பேராசை பிடித்தவர்களாக இருப்பார்கள். தங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள். அதனால் யாரிடமும் உண்மையுடன் இருக்க மாட்டார்கள். நீங்கள் டேட்டிங் செய்பவர் ஒரு சந்தர்ப்பவாதி என்றால், ஒரு நாள் கண்டிப்பாக நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள். அதற்கு காரணம் உங்களின் தேவைகளை அவர்கள் ஒரு நாளும் பூர்த்தி செய்ய மாட்டார்கள். அவரின் தேவைகளும் ஆசைகளும் நிறைவேறியவுடன் ஒரு நாள் மாயமாக மறைந்து விடுவார்.

ஒரு நாள் தன் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து விடுவார்
திருமணமான ஆணுடன் டேட்டிங் செல்வது சரியா? திருமணமான ஆண் என்றால் இன்னொரு பிரச்சனையும் உண்டு; உங்கள் மீது அவர் எவ்வளவு தான் பைத்தியமாக இருந்தாலும் சரி, ஒரு நாள் இல்லை ஒரு நாள் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மீண்டும் சேர்ந்து கொள்வார். உங்களுடனான உறவை அவர் வெளி உலகத்திற்கு சொல்ல விரும்பவில்லை என்றாலோ அல்லது தன் மனைவியை சட்டப்பூர்வமாக பிரிய தைரியம் இல்லை என்றாலோ, கண்டிப்பாக உங்களுக்கு தான் பிரச்சனை. அதனால் அவரை விட்டு போய் விடுவது தான் நல்லது. உங்கள் உழைப்பும் நேரமும் முழுமையாக வீணாய் போகும். திருமணமான ஆணுடன் டேட்டிங் செல்ல விரும்பினால் இந்த துன்பங்களை எண்ணி முன்னெச்சரிக்கையாக இருங்கள்.
உங்களுக்காக தன் மனைவியை அவர் பிரிந்தால்…
சரி, உங்களுக்காக அவர் தன் மனைவியை பிரிந்து விட்டு வருகிறார் என வைத்துக் கொள்வோம். நீங்கள் சந்தோஷமாக இருக்க முடியுமா? நாளைக்கே வேறு ஒரு பெண்ணுக்காக உங்களை அவர் கைவிட மாட்டார் என்பதில் என்ன உத்திரவாதம் உள்ளது?

அப்படியானால் திருமணமான ஆணுடன் டேட்டிங் செல்வது தவறா? இல்லை தான் என்றாலும் கூட அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணிக் கொள்ளுங்கள். அவர் உங்களிடம் நல்ல மனிதராக இருக்கலாம். இவ்வகையான புதிர்களுக்கு காலம் தான் பதில் தரும். அவரை பற்றி நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வரை, கவனமாக இருங்கள். என்ன இருந்தாலும் திருமணமான ஆணுடன் டேட்டிங் செல்வதை தவிர்க்கவும்.
0 comments:
Post a Comment