நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த மூதாட்டிகள் வரை பல்வேறு வகையில் பாலியல் வன்முறைக்கு ஆளாகிற கொடூரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பிற்காக பலவகை அப்ளிகேஷன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
ஐ யம் சேஃப் ( I AM SAFE )
கூகுளால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மென்பொருள், பெண்கள் கடந்து வரக்கூடிய எல்லா இடங்களையும் ஜி.பி.எஸ் மூலம் கண்டறிந்து, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்புகிறது. பாதுகாப்புக்கு வழி செய்யும் இது ஒரு இலவச மென்பொருளாகும்.
அலர்ட்.அஸ் ( Alert.us )
அவசர காலத்தில் அலர்ட் பொத்தானை அழுத்தும்போது குறிப்பிட்ட எண்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பி ஆபத்திலிருந்து காக்கிறது. பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்ற குழந்தைகள் பத்திரமாகத் திரும்பி வர வேண்டுமே என்று கவலைப்படும் பெற்றோர்களுக்கு இது வரப்பிரசாதமான அப்ளிகேஷன்.
எஸ்.ஓ.எஸ் விசில் (SOS Whistle)
ஆபத்தான நேரத்தில் இது விசில் சத்தத்தின் மூலம் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது. இந்த ஆப் எவ்விதமான எச்சரிக்கை செய்தியையோ, அழைப்பையோ அனுப்பாமல் விசில் சத்தத்தை மட்டும் எழுப்புகிறது.
போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் ஒலியை எழுப்பும் இந்த அப்ளிகேஷனுக்கு இணையமோ, ஜி.பி.எஸ். சேவையோ தேவையில்லை என்பது கூடுதல் வசதி.
சர்க்கிள் ஆஃப் 6 (Circle of 6 )
ஐ போனில் மட்டுமே இயங்கும் இந்த அப்ளிகேஷன் மூன்று பெண்களாலும், மூன்று ஆண்களாலும் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வெளியே செல்லும் பெண்கள் வீட்டு நபர்கள், நம்பத்தகுந்த நண்பர்கள், காவல்துறை என்று அவரவர் விருப்பத்துக்கேற்ப 6 பேரின் எண்களை இந்த சர்க்கிளில் வைத்துக்கொள்ளலாம்.
லைஃப் 360 டிகிரி (Life 360)
இதை ஸ்மார்ட் போன் அல்லாத பிற போன்களிலும் பயன்படுத்த முடிவது கூடுதல் வசதி. ஜி.பி.எஸ், வைஃபை (WIFI) வசதியும் கொண்ட இந்த அப்ளிகேஷன், அடிக்கடி நாம் செல்கிற இடத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் சொல்வது, குடும்ப உறுப்பினர்கள் வெளியே புறப்படும்போதும் வீட்டுக்குத் திரும்பி வந்த உடனேயும் மெசேஜ் தருவது, பாலியல் குற்றவாளிகள் பற்றிய விபரங்கள், நாம் குடியிருக்கும் இருப்பிடத்தின் அருகில் நடந்த பாலியல் குற்றங்கள் போன்ற தகவல்களையும் தருகிறது.
0 comments:
Post a Comment