
ஏதாவது பார்ட்டி ஏற்பாடு செய்து த்ரிஷா ஃபோட்டோ எடுத்து போட்டு ட்விட்டரில் இயங்கும் மற்ற நட்சத்திரங்களை எரிச்சலடையச் செய்வது வழக்கம் தான். ஆனால் இம்முறை த்ரிஷாவின் டீமில் இதுவரையிலும் கண்டிராத தயாரிப்பாளர் வருண் மணியன் த்ரிஷாவை கட்டிப்பிடித்திருப்பது போன்ற ஃபோட்டோ ஒன்று ட்விட்டரில் ரிலீஸ் ஆனது தான் வதந்திக்கு காரணம்.
த்ரிஷாவின் காதலராக தமிழ் சினிமாவில் அறியப்படும் ராணாசமீபகாலமாக அவர் வேறு ஒரு நடிகையுடன் ஆங்காங்கே காணப்படுவதும், சென்னைக்கு வந்து த்ரிஷாவை சந்திக்காமலே சென்றதாலும் அவருக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க த்ரிஷா இப்படி செய்திருக்கலாம் என்றும் கமெண்ட் அடிக்கிறது கோடம்பாக்கம்.
வதந்தி பரவிய வேகத்திலேயே ’அதையெல்லாம் நம்பாதீர்கள். எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டா, உடனே அந்த விஷயம் என் மூலமாகவே உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்’ என்று ஒரு ட்வீட் தட்டிவிட்டார் த்ரிஷா. மேலும் ’SHE NEEDED A HERO’ என்ற படம் ஒன்றையும் போட்டிருக்கிறார். எனவே த்ரிஷாவுக்கும் ராணாவுக்குமான காதல் இன்னும் தொடர்கிறது என்கிறது திரையுலகம்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.