சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கடந்த மாதம் 27ஆம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு தினத்தில் விஜய் ரசிகர்கள் ஸ்வீட் கொடுத்து கொண்டாடினர். மேலும் ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்த நீதிபதியை பாராட்டியும், தமிழகத்திற்கும், தங்கள் தலைவர் விஜய்க்கும் விடுதலை வாங்கித்தந்த நீதிபதிக்கு நன்றி தெரிவித்தும் போஸ்டர் அடித்து அவர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் நேற்று ஜாமீன் மனு குறித்த விசாரணை நடைபெற்றபோது, அதே விஜய் ரசிகர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து சில கிலோ மீட்டர்கள் வரை ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருந்தனர். அவர் விரைவில் விடுதலையாகி வெளிவர பிரார்த்திப்பதாக அந்த போஸ்டரில் தெரிவித்திருந்தனர். காலையில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு மதியம் திடீரென பல்டி அடித்த பவானிசிங் போல், விஜய் ரசிகர்களின் பல்டியை பார்த்தும், அவர்கள் அடித்த போஸ்டர்களை பார்த்தும் பொதுமக்கள் கிண்டலடித்து சென்றனர்.
இதுகுறித்து விஜய் ரசிகர் ஒருவரிடம் கேட்டபோது, இந்த போஸ்டருக்கும் விஜய்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த விஷயத்தில் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள் என்று எங்கள் தலைவர் கூறிவிட்டார். எனவே தான் எங்களுக்கு சரியென்று தோன்றியதை நாங்கள் இந்த போஸ்டர் மூலம் தெரிவித்திருக்கின்றோம் என்று கூறினார். நேற்று ஒருவேளை ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்திருந்தால் ஜெயலலிதா இந்த வழியாகத்தான் வந்திருப்பார். அப்போது அந்த போஸ்டர்கள் அவருடைய கண்களில் பட்டிருக்கும். ஆனால் அது நடக்கவில்லையே என்ற ஆதங்கம் சிலரிடம் தெரியவந்தது.

0 comments:
Post a Comment